வாய்ப்புகள் இல்லை! பணமும் காலி! காதல் கணவனை கழட்டிவிட்ட பிரபல நடிகரின் மனைவி! அதிர்ச்சி காரணம்!

திரையுலகத்தின் முன்னணி நடிகரான இம்ரான்கான் தன்னுடைய காதல் மனைவி அவந்திகா அவர்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.


இந்த தம்பதியினர் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து பின்னர் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து இவர்களுக்கு இமரா மாலிக் என்று ஒரு அழகான பெண் குழந்தை கடந்த 2014ஆம் ஆண்டு பிறந்தது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

நடிகர் இம்ரான் கான் எந்த வேலைக்கும் செல்லாமல் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்திருக்கிறார். கடைசியாக கதிபதி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிகனாக அதிர்ஷ்டமான வாழ்க்கையை நடிகர் இம்ரான்கான் பெறவில்லை என்பதுதான் உண்மை.

சினிமா பட வாய்ப்புகள் முற்றிலும் இல்லாத காரணத்தால் நான்கு ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் வீட்டிலேயே இருந்து இருக்கிறார் இம்ரான் கான். இதனை அடுத்து இயக்குனராக வேண்டும் என்று எண்ணி ட்ராமா 2.0 என்ற குறும் படத்தை இயக்கினார் . இத்துடன் அவர் இயக்குனர் பணியிலும் பெரிதாக ஆர்வம் காட்ட தவறிவிட்டார்.

எந்த வேலையும் சரியாக அமையாத காரணத்தால் இம்ரான்கான் சிறிய விஷயங்களுக்கு கூட மிகவும் பெரியதாக ரியாக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டாராம் . மேலும் தன்னுடைய சேமிப்பு பணத்தை அனைத்துமே அன்றாட செலவுக்கு பயன்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து இம்ரான் கானின் மனைவி அவந்திகா அவரிடம் சண்டை இட்டுள்ளார் .

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவந்திகா இம்ரான் கானின் இல்லத்தை விட்டு அவரது மகள் உடன் வெளியேறிவிட்டார். தற்போது இந்த தம்பதியினர் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை அவந்திகாவிடும் கேட்டபொழுது தினம்தோறும் நானும் என் கணவரும் சண்டையிட்டுக் கொள்வதை என் மகள் பார்க்கிறாள். அவள் அவளுடைய மனம் கஷ்டப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆகையால் நான் அவளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் என்று கூறியிருக்கிறார்.