8 வருட திருமண வாழ்க்கை கசந்தது! பிரபல நடிகரை கழட்டி விடும் மனைவி!

ஹிந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் தான் இம்ப்ரன் கான். "ஜானே து யா ஜானே" என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.


இவரை பிரியப்போவதாக இவரது மனைவி தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்த செய்தியானது சமூக வலைதளத்தில்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது  என்றே கூறலாம். இம்ரான் கான் கடந்த 2011 -ஆம் ஆண்டு அவந்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி அவந்திகா இந்து மதத்தை சார்ந்தவர், இவரோ முஸ்லீம் மதத்தை சார்ந்தவர். மதம் சார்ந்த பிரச்னைகள் எதுவும் வர கூடாது என்பதில்  இம்ரான் தங்களது திருமணத்தி நீதிமன்றத்தில் நடத்தி கொண்டார். 

தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றன .  கடந்த 2014-ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது, அதற்கு இம்ரா என்று பெயரிட்டனர். இதனை மகிழ்ச்சியாக இருவரும் சமூக வலைதளத்தில் பதிவு இட்டனர். இவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த இம்ரான் மற்றும் மனைவி அவந்திகா திடீரென "சமாதானப்படுத்த முடியாத" ஒரு சில பிரச்னைகளால் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவந்திகா ஏற்கனவே தனது கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இவர்கள் இருவரும் சட்டப்படி பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர்.  இந்த செய்தி இம்ரான் கான் ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.