50 டாஸ்மாக் கடையில் காவல் துறையினர் திடீர் பறிமுதல் - சென்னை புறநகர் அதிர்ச்சி

டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் டம்ளர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொன்னேரி,மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகள் சென்னை புறநகரில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் அரசு அனுமதி இன்றி 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இரவு நேரங்களில் கடையில் பணிபுரிவோர் மதுபானங்களை அதிக விலையில் விற்று கொண்டிருக்கின்றனர்.  

இதுதொடர்பான புகார்கள் டாஸ்மாக் மேலாண்மை அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டன. மேலும் இவற்றில் சில கடைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் மேலாண்மைண்மை அலுவலர் உத்தரவின் பேரில் அந்த கடைகளை சென்னை சிறப்பு படை சப்-கலெக்டரான மாலதி திடீரென்று பார்வையிட்டார். அப்போது மேற்கூறிய கடைகளில் மதுபானங்கள் அதிக விலையில் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு தடை செய்திருந்த பிளாஸ்டிக் டம்ளர்கள் மிகுதியான புழக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. அதிக விலையில் விற்கப்படும் மதுபானங்களையும், பல்லாயிரக்கணக்கான பிளாஸ்டிக் டம்ப்ளர்களையும் சப் கலெக்டர் பறிமுதல் செய்தார்.

மேலும் இது குறித்து மண்டல ஆய்வாளரிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென்றும் சப்-கலெக்டர் ரேவதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.