மேக்கப் மீது ஆர்வம் அதிகமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை தான்!

மேக்கப் சாதனங்களை தனக்கென்று தனியே வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.


  1. ஒருவர் உப்யோகித்தவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. முக்கியமாக மஸ்காரா, காஜல் மற்றும் ஐ லைனர்.
  2. கண்களுக்கு உபயோகிக்கும் மஸ்காரா முதலியவற்றை 6 மாதத்திற்கு ஒருமுறை புதிதாக வாங்குவது அவசியம்.
  3. இரவு உறங்கும் முன் மேக்-அப்பை முழுவதுமாக நீக்க வேண்டும். 
  4. முக பூச்சுகள் போன்றவற்றை வாங்கும் போது தரக்கட்டுப்பாடு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
  5. கண்களுக்கு போடப்படும் மேக்-அப்களில் கெமிக்கல் அதிகளவில் இல்லாத க்ரீம்கள் நேச்சுரல் & ஆர்கானிக் என்ற பெயரில் கிடைக்கின்றன்.  அவற்றை பார்த்து வாங்க வேண்டும்.
  6. முகத்தை பிளீச் செய்யும் போது ரசாயனம் கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  7. கண்களுக்கு பயன்படுத்து பிரஷ் சுத்தமாக இருக்க வேண்டும்.  கைகளை நன்கு கழுவி விட்டு கண்களுக்கு மேக்-அப் போடவேண்டும்.
  8. வண்டியில் போகும் போது மேக்-அப் போடுவதை தவிர்க்கவும்.
  9. முடிந்தவரை வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்து கொள்வது நல்லது.