ஆடி மாதம் வந்தாச்சு! பண்டிகைகளும் வந்தாச்சு! என்னென்ன? எப்பெப்போ தெரியுமா?

தட்சிணாயணம் ஆரம்பம் ஆகும் ஆடி மாதம் திருவிழாக்களும் பண்டிகைகளும் ஆரம்பிக்கும் மாதமாகும். இந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி துவங்குகிறது.


ஆடி மாதத்தின் முக்கிய பண்டிகை நாட்கள் கீழ்வருமாறு:

ஆடி வெள்ளி: இந்த மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளியும் அம்மன் வழிபாடு சிறப்பாக நடைபெறும். அனைத்து அம்மன், சக்தி, துர்க்கை ஆலயங்களில் பக்தி மனம் கமழும், யாகங்கள் நடைபெறும். விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கைகூடும்.

ஆடி கிருத்திகை (27.7.2019): கந்தனுக்கு உகந்த நாள். அன்று பக்தர்கள் காவடி எடுத்து, பாலபிஷேகம் செய்து தேவ சேதுபதியை வணங்குவர்.

ஆடி அமாவாசை (31.7.2019) : பித்ருக்களின் ஆசீர்வாதத்தை வேண்டி வழிபாடும் நாள். இந்நாளில் வழிபடுவதில் மூலம் நம் பாவம் தொலைந்து, நமது சந்ததியினருக்கு நல்வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

ஆடி பூரம் (3.8.2019) : பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராகிய ஆண்டாள் அவரதரித்த திருநாள். ஆண்டாள் அருளிய திருப்பாவையும், வாரணம் ஆயிரமும் பாடி வர மனம் போல் மாங்கல்யம் அமையும். சிறிவில்லிபுத்தூர் ஆலயத்தில் விமர்சையாக விழா நடைபெறும்.

ஆடி பெருக்கு (3.8.2019) : ஆடி 18 -ல் நடைபெறும் இந்த திருவிழா மிக விமர்சையாக கொண்டப்படுகிறது. இந்த பருவத்தில் தமிழக ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். நீர் நிலைகளுக்கு பூஜை செய்து தீபம் ஏற்றி வழிபடுவர். நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் வாழ்வில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீவரலஷ்மி விரதம் (9.8.2019): அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் தியானித்து அவளைச் சரணடைய வேண்டிய நாள்

ஆடி பௌர்ணமி (15.8.2019): ஆடிப்பௌர்ணமி அன்று குரு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது

யஜூர் உபாகர்மா (15.8.2019) பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை அடைவதற்காக ஏற்பட்டது.

காயத்ரி ஜபம்: (16.8.2019) காயத்ரீ மந்திரத்திற்கு மேலான மந்திரம் எதுவுமில்லை.