பாலும், எலுமிச்சையும் மட்டும் போதும்! உங்கள் அழகுக்கு அழகு கூட்டலாம்!

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள்.


அதுபோன்று அழகுக்கு ஆசைப்படுபவர்கள் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்கள் மூலமே ஆசைப்பட்ட அழகை அடைந்துவிட முடியும்.

நான்கு ஸ்பூன் பால் எடுத்துக்கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ சாற்றை அதில் பிழிந்துவிடுங்கள். இதனை ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும். பாலும் லெமனும் சேரும் போது பால் திரிந்து விடும். இதுதான் அழகு தரக்கூடிய பேஸ்ட். ஆம், இந்தக் கலவையை எடுத்து கண்ணுக்குள் விழுந்துவிடாமல் முகம், கழுத்து, கை, கால்களில் நன்றாக தேய்த்து காய வைக்கவும். கிட்டத்தட்ட ஐந்து முதல் 10 நிமிடங்கள் நன்றாகக் காய்ந்ததும் கழுவினால், பார்லரில் சென்று பிளீச் செய்தது போன்ற அழகு கிடைக்கும்.

அதேபோன்று இன்னும் சில அழகுக் குறிப்புகள் பார்க்கலாம்.

  • கேரட் சாறு எடுத்து அத்துடன் பால் சேர்த்து முகத்திலும், கழுத்திலும் தேய்த்து காய வைத்துக் குளிக்கலாம்.
  • பப்பாளிப் பழம் அழகு தரும் பழமாகும். அதனால் பழத்தை சாப்பிட்டுவிட்டு, அதன் தோலை முகத்தில் தேய்த்து காய வைத்துக் கழுவலாம்.
  • கேரட் சாறுடன் தேன் கலந்து நன்றாகக் கலந்து முகத்தில் தேய்த்து காய வைப்பதும் அழகு தரும்.

பழச்சாறுகள் அழகு தருவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால் தினமும் ஏதேனும் ஒரு பழச்சாறு பருக வேண்டும்.