சுபிட்சம் பெருக இந்த நாளில் இந்த பூஜையை ஒரே ஒரு முறை பெண்கள் செய்தால் போதும்!

பொதுவாகவே மஞ்சளையும் குங்குமத்தையும் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதாக சொல்கின்றன புராணங்கள்.


இந்த ஆண்டில் வரும் மகர சங்கராந்தி தேவதை மஞ்சள் வண்ண ஆடை அணிந்து வருவதும் கொங்கு மண்டலத்தில் உள்ள குடையும் சாமரமும் ஏந்தி வருவதும் இந்த ஆண்டில் மஞ்சள் குங்குமத்தால் செய்யும் பூஜைக்கு விசேஷ பலன் கிட்டும் என்பதை உணர்த்துகிறது.

இந்த ஆண்டில் எல்லோரும் செய்ய ஏற்றதும் எளிமையானதுமான வழிபாடு, ஒவ்வொரு நாளும் அவரவரது இஷ்ட தெய்வத்தைக் கும்பிடும் போது மஞ்சளாலும், குங்குமத்தாலும் தெய்வங்களுக்குப் பொட்டு வைத்து பூப் போட்டு ஆராதிப்பதுதான்.

அன்றாடம் முடியாவிட்டாலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது மஞ்சள் குங்குமத்தால் சுவாமி படங்கள், சிலைகள் போன்றவற்றுக்குப் பொட்டுவைத்தும், தெரிந்தால் போற்றி துதிகளைச் சொல்லி குங்கும அர்ச்சனை செய்தும் வழிபடலாம். அர்ச்சனை செய்த குங்குமத்தை தினம் இட்டுக் கொள்வதும் பூஜை செய்த மஞ்சளை முகத்திலும் திருமாங்கல்யச் சரட்டிலும் தடவிக் கொள்வதும் மங்களங்களை நிலைக்கச் செய்து மகிழ்ச்சியைப் பெருக்கும்.

மேலும் வீட்டுக்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருட்களை வாங்கி தருவது வருடம் முழுக்க சுபிட்சத்தை நிலைக்கச் செய்யும்.