மகாபாரதப் போர் நடந்த இடத்திற்கு குருக்ஷேத்திரம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

விஷ்ணு சஹஸ்ரநாமம் உதித்த இடம், 18 நாட்கள் மகாபாரதப் போர் நடந்த இடம் தர்ம க்ஷேத்ரே குரு ஷேத்ரே என பகவான் கிருஷ்ணர் சிறப்பித்த தலம், பகவத் கீதை பிறந்த இடம் என பல சிறப்புகள் பெற்றது ஹரியான மாநிலத்தில் அமைந்துள்ள குருஷேத்திரம்.


இங்கு பிரம்ம சரோவர் என்ற பெயர் கொண்ட புண்ணிய தீர்த்தம் உள்ளது. சுமார் 3600 அடி நீளம், 1200 அடி அகலம், 15 அடி அகலம் கொண்ட இந்த தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் 5 லட்சம் பேர் புண்ணிய நீராட முடியும்.

உலகிலேயே மிகப் புண்ணியத் தலமாக போற்றப்படும் இந்த இடத்திற்கு குருஷேத்திரம் என்ற பெயர் எப்படி வந்தது?

கௌரவர் பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவர் குரு மகாராஜா. இவர் இந்த இடத்தில் தவம், அன்பு, சுத்தம், தானம், சக்தியம், பிரம்மசரியம், தயை, தர்மம் போன்ற எட்டு வித குணங்களும் தழைக்க விரும்பி, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்ள விரும்பினார். பகவான் விஷ்ணுவும் இதைக் கேட்டு மகிழ்ந்து ஆசீர்வாதம் அழைத்தார். அத்துடன் இந்த இடம் குரு மகராஜ் என்ற பெயரில் குருக்ஷேத்திரம் என விளங்கும் எனவும், புண்ணியத் தலமான இங்கு யாராவது இறந்தால் அவர்கள் மோட்சத்திற்கு செல்வார்கள் எனவும் இரு வரங்கள் அளித்தார்.

இங்குள்ள ஜ்யோதி சர் தீர்த் என்ற இடமே அர்ஜுனனுக்கு பகவான் கீதையை போதித்த இடமாம்.

சரஸ்வதி நதிக்கும் திரிஷ்ஷவல் என்ற நதிக்கும் இடையில் உள்ள இத்தலம் உத்தரவெடி, பிரம்மவாடி, தர்மக்ஷேத்திரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு தற்போது குருக்ஷேத்திரம் என்று விளங்குகிறது.