தலைமுடியை பிடித்து அடித்தார்! கண்ணாடி மீது தள்ளிவிட்டார்! டிவி சேனல் ஓனர் மீது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் புகார்!

இமயம் டி.வி தொகுப்பாளரை அந்த செய்தி சேனலில் எம்.டி அடித்து துன்புறுத்தி இருக்கும் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள R3 அசோக்நகர் காவல் நிலையத்தில் இமயம் டிவி தொகுப்பாளரான சுவாதி கிருஷ்ணா அந்த நிறுவனத்தின் எம்.டி மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் எழுதியிருந்ததாவது:

"நான் இமயம் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய ஜூன் மாதம் சம்பளத்தை நிறுவனம் எனக்கு இன்னும் அளிக்கவில்லை. இதனால் நான் பலமுறை அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்தது. இந்நிலையில் நேற்று எங்கள் நிறுவனத்தில் அக்கவுண்ட்டண்ட் ஆன ராஜன் அவர்கள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளுமாறு நிறுவனத்திற்கு அழைத்தார்.

ஆனால் நான் அங்கு சென்றபோது எனக்கு வெறும் 2000 ரூபாய் மட்டுமே கொடுத்தனர். அதனால் நான் அழுதால் வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்தது. அவர் என்னை நிறுவனத்தின் எம்.டி.யை பார்க்குமாறு கூறினார். நான் அவரைப் பார்க்க சென்றேன். அவர் அறைக்கு சென்று எனக்கு நடந்தவற்றை அனைத்தையும் கூறினேன்.

அவர் என்னை மதிக்காமல் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு வரவேண்டிய மீது சம்பளத்தை அவரிடம் தருமாறு கேட்டேன். அதற்காக என்னை அறையில் இருந்து வெளியேறும்படி கூறினார்.  நான் என்னுடைய மாமாவிற்கு செல்போனில் அழைக்க முற்பட்டேன். அப்போது என் எம்.டி எழுந்து வந்து என் செல்போனை தட்டி உடைத்தார். நான் சத்தம் போட்ட போது என்னை அடித்து உதைத்தார்.

மேலும் கண்ணாடியின் மீது என்னை தள்ளிவிட்டு அறையில் இருந்து வெளியேற்றினார். வெளியே இருந்த மாமாவை நான் அழைத்து வந்தபோது, எம்.டி அவருடைய அறைக்கு சென்று தாழிட்டு கொண்டார். உடனே என் மாமா ஆர்-3 அசோக் நகர் காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்து தொலைபேசியின் மூலம் நிகழ்ந்தவற்றை கூறினார்.

என்னை துன்புறுத்தியதற்காக என்  எம்.டி. மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார். இந்த சம்பவமானது அசோக் நகர் காவல் நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.