சீனியர் நடிகை மஞ்சுவுடன் நடித்த அனுபவம்! மிரட்சியில் இருந்து மீள முடியவில்லை! தனுஷ் பூரிப்பு!

அசுரன் திரைப்படத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பை பார்த்து நடிகர் தனுஷ் அசந்துபோனதாக பேட்டியளித்தார்.


நடிகர் தனுஷும் இயக்குனர் வெற்றிமாறனும் 4-வது முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் "அசுரன்". இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ்,வெற்றிமாறன்,மஞ்சு வாரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நடிகர் தனுஷ் பேசியபோது, "மஞ்சுவாரியரின் நடிப்பை கண்டு மிகவும் பயந்து போனேன். 'காதல் கொண்டேன்' திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தபோது, நடிகர் நாகேஷிடம் பலரது நடிப்பை வெகுவாக பாராட்டினேன். அப்போது அவர் எனக்கு ஒரு அறிவுரை கூறினார்.

அதாவது, "யாருடைய நடிப்பை கண்டு பலரும் பேசுகிறார்களோ அவர் சாதாரணமாகவே நடிப்பார். திறமையாக நடிக்க கூடியவர்கள் தங்கள் நடிப்பை வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள்" என்று கூறினார். 

நாகேஷ் ஐயா கூறியவாறே நடிகை மஞ்சுவாரியர் நடிப்பதே எங்களுக்கு தெரியவில்லை. அவர் மிகவும் இயல்பான முறையில் நடிக்கின்றார். சில முக்கியமான காட்சிகளில் நடித்த பின்னர் என்னால் உடனடியாக இயல்பான முறைக்கு மாற இயலாது. ஆனால் அதனை அவர் திறமையாக செய்கிறார். அடுத்த நொடியே அனைவரிடமும் சிரித்து பேசுகிறார்."என்று புகழ்ந்து தள்ளினார்.

தனுஷ் புகழ்ந்ததை கேட்ட அவருடைய ரசிகர்கள் அசுரன் திரைப்படத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.