நான் சுத்தமான தமிழச்சி! பீர் குடித்துக் கொண்டே பிக்பாஸ் மீரா மிதுன் வெளியிட்ட ஷாக் வீடியோ!

பீர் அடித்து கொண்டே தான் ஒரு தமிழ் பெண் என்று பிக்பாஸ் போட்டியாளரான மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மீராமிதுன் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோயொன்று வெளியிட்டுள்ளார். அதாவது பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை அனைவரையும் நிம்மதி இல்லாமல் அலைய செய்தவர் மீரா மிதுன். அனைவரிடமும் தேவையற்று சண்டைக்கு சென்று வந்தார். இறுதியாக சேரனிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறினார். 

தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய நண்பர் ஒருவரின் உதவியுடன் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மீரா ஒரு லைவ் ஷோவில் பதிலளித்து வந்தார்.

அப்போது அவர் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது ஒருவர், "நீங்கள் தமிழ் பெண்ணா. மது அருந்துகிறீர்களே" என்று கேட்டார். அதற்கு மீரா, "இதற்கும் தமிழ் மொழிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. மது அருந்துவதற்கும் கலாச்சாரத்திற்கும் இணைப்பில்லை" என்று பதிலளித்தார்.

மற்றொருவர் "பீர் குடித்தால் தொப்பை உண்டாகும். அதனால் பீர் குடிக்காதீர்கள்" என்று கூறினார். அதற்கு மீரா, "தான் பீர் குடிப்பதாகவும், ஆனால் எனக்கு தொப்பை இல்லை. தினமும் யோகா செய்து தொப்பையை குறைத்துக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோவை கண்ட சமூக வலைத்தளத்தினர் மீராவை வசைபாடி வந்துள்ளனர்.