18 வயது மூத்த அத்தையுடன் கள்ளக்காதல்! ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளைஞர் செய்த வெறிச் செயல்!

ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை அடித்துக்கொலை செய்து மலைப்பகுதியில் உடலை வீசிய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கரும்புகை என்ற ஊரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி குட்டியம்மாள். இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும் இருக்கிறார். 

 

குட்டி அம்மாளுக்கு அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற 25 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கொடுமை என்ன என்றால் தேவேந்திரன் குட்டி அம்மாளின் அண்ணன் மகன். அதாவது குட்டி அம்மாள் தேவேந்திரனுக்கு அத்தை முறை.

 

  அத்தை – மருமகன் இடையிலான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்தனர். இந்த விவகாரம் தேவேந்திரனின் மனைவியான கலைச்செல்விக்கு தெரியவந்தது. கள்ளக் காதலை கைவிடும்படி பலமுறை கலைச்செல்வி தனது கணவரிடம் சண்டை போட்டு வந்துள்ளார். 

 

இருப்பினும் தேவேந்திரன் தனது கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு கலைச்செல்வி சென்றார். குழந்தைகளும் மனைவியும் வீட்டை விட்டு சென்ற விட்டபோதும் தேவேந்திரனின் கண்ணை காமம் மறைத்துவிட்டது. குட்டி அம்மாளுடன் தொடர்ந்து அவர் கள்ள உறவை நீட்டித்துள்ளார்.

 

  இந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் கள்ள உறவை நீடிக்க விரும்பாத குட்டியம்மாள் தேவேந்திரனை தவிர்த்து வந்துள்ளார்.  மனைவியும் உடன் இல்லாத நிலையில் காமம் தலைக்கேறிய தேவேந்திரன் யாரும் இல்லாத நிலையில் குட்டி அம்மாளின் வீட்டுக்கு சென்றார். அங்கு குட்டி அம்மானளை தனது ஆசைக்கு இணங்குமாறு அவர் வற்புறுத்தவே சண்டை ஏற்பட்டது.

 

  இதில் அவரை சரமாரியாக தேவேந்திரன் தாக்கினார். பலத்த காயமுற்ற குட்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதையடுத்து யாருக்கும் தெரியாமல் அவரது உடலை தேவேந்திரன் மலைப்பகுதியில் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

 

  இந்தநிலையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த குட்டி அம்மாளின் மகனான கார்த்திக் துர்நாற்றம் வீசுவதை கண்டு மலையடிவாரத்துக்கு சென்றார். அவரது தாயின் சடலம் கிடைக்கவே அதிர்ச்சி அடைந்த கார்த்திக் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சடலத்தை மீட்ட செஞ்சி போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர்.