பன்றிப் பண்ணையில் 4 பேர் ஹோமோ செ**ஸ்! அங்கு 6ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த பயங்கரம்! திருச்சியை உலுக்கிய சம்பவம்!

ஓரினச்சேர்க்கையாளர் உறவிற்கு ஒத்துழைக்க மறுத்ததால் 6-ஆம் வகுப்பு மாதவன் கொலை செய்யப்பட்ட சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சியில் அரியமங்கலம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள அம்பிகாபுரம் பகுதியில் அலியார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். சிறுவன் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளான். மேலும் 3-ஆம் தேதி முதல் சிறுவனை காணவில்லை என்று கூறப்பட்டது. 

சிறுவனின் பெற்றோர் 6-ஆம் தேதியன்று அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

அதாவது அப்பகுதியில் பிரபல ரவுடியான சேகர் மற்றும் முன்னாள் அதிமுக கவுன்சிலரின் மகனான இளவரசன் ஆகியோருடன் சிறுவன் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அப்பகுதிக்கு அருகே பல பன்றி பண்ணைகள் இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. இந்த பண்ணைகளில்  இளவரசன், லோகேஷ், வீராசாமி, சரவணன் ஆகிய 4 இளைஞர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சம்பவத்தன்று மாணவனையும் அவர்கள் பன்றி பண்ணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவனை வற்புறுத்தி ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட முயன்றுள்ளனர். ஆனால் அவன் சரிவர ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவனை கொலை செய்துள்ளனர். 

அவனுடைய சடலத்தை அருகிலுள்ள குப்பை கிடங்கில் வீசியுள்ளனர். விசாரணையை முடித்தவுடன் காவல்துறையினர் நேராக சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மாணவனின் உடலை மீட்டு எடுத்தனர் பின்னர் அங்கேயே மருத்துவர்களை வரவழைத்து பிரேத பரிசோதனையையும் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.