கீழ் வீட்டில் கணவனுடன் குடித்தனம்! மேல் வீட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்! பிறகு மோனிஷாவுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் அருகில் ஆலுவா தோட்டக்காட்டுக்கர என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் அருகில் ஆலுவா தோட்டக்காட்டுக்கர என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருக்கும் மேல்தளத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது . இதனையடுத்து அங்கு வசித்து வரும் மக்கள் துர்நாற்றம் வீசும் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சென்று பார்த்த பொழுது அதே குடியிருப்பில் வசித்து வந்த ரமேஷ் மற்றும் மோனிஷா ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடந்ததை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் தற்கொலை செய்து நான்கு நாட்களுக்கும் மேலாக இருக்குமென்பதால் அழுகிய நிலையில் கிடந்து உள்ளனர்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . உடனே இதனை பற்றிய தகவலை போலீசாரிடம் கூறியுள்ளனர் . தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போலீசாருக்கு பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. இறந்து கிடந்த இருவரும் அந்த குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ஆவர்.

அந்த வாலிபரின் பெயர் ரமேஷ் என்றும் அவர் கீழ்தளத்தில் குடியிருக்கிறார் என்றும் தெரியவந்தது. மேலும் அந்த இளம் பெண்ணின் பெயர் மோனிஷா என்றும் அவர் அந்த குடியிருப்பு பகுதியில் மேல் தளத்தில் வசித்து வருபவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இதுமட்டுமில்லாமல் தற்கொலை செய்துகொண்ட மோனிஷாவிற்கு சதீஷ் என்பவருடன் திருமணமாகி குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமாவில் எடிட்டிங் வேலைபார்க்கும் சதீஷும் மோனிஷாவும் திருமணம் செய்துகொண்டு அந்த குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் மேல்தளத்தில் வசித்து வந்துள்ளனர். அதே குடியிருப்பு பகுதியில் கீழ் தளத்தில் வசித்து வந்தவர் பெயர் ரமேஷ். இந்நிலையில் ரமேஷுக்கும் மோனிஷாவிருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது . நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக

 மாறியுள்ளது. இவர்கள் இருவரின் கள்ள காதல் பற்றிய உண்மை மோனிஷாவின் கணவர் சதீஷ்க்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.