நடிகர் விஜயின் மனைவிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்..! கொண்டாடித் தீர்க்கும் தளபதி ரசிகர்கள்! காரணம் என்ன?

பிரபல கோலிவுட் உச்ச நட்சத்திரத்தின் மனைவிக்கு விருது கிடைத்திருப்பது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவர் விஜய். இவரை அவருடைய ரசிகர்கள் பாசமாக "இளைய தளபதி" என்று அழைப்பர். இவருடைய மனைவியின் பெயர் சங்கீதா. இந்நிலையில் தனியார் ஊடக நிறுவனம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் சங்கீதாவுக்கு விருதளித்து சிறப்பித்துள்ளது.

இந்த விருதிற்காக தன்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டவுடன் சங்கீதா இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்த விருதினை சங்கீதாவுக்கு பிரபல கோலிவுட் நடிகையான சிம்ரன் வழங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை சங்கீதா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்தவுடன் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாது பல்வேறு நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணமுள்ளனர்.

இளையதளபதி விஜய்யின் மனைவியான சங்கீதாவுக்கு பிரபல தனியார் நிறுவனம் விருதளித்திருப்பது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "அறிவிக்கப்படாத தளபதி" என்ற விருது கோலிவுட் நடிகை சிம்ரன் கையால் சங்கீதா பெற்றுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.