மாதுளை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு காணாமல் போகுமே !!

மாதுளம் பழத்தில் இரும்புச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், சர்க்கரை போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அதோடு மாதுளையின் இலை, பூ, பட்டை மற்றும் பழம் எல்லாமே மருந்தாக பயன்படுகிறது.


·         ஏராளமான சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்துநின்று போராடுகிறது.

·         மாதுளம் பிஞ்சை மோரில் அரைத்து குடித்தால் வயிற்றுவலி, கழிசல், வயிற்றுப்புண், வயிற்றுக்கடுப்பு போன்றவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

·         இனிப்பு மாதுளை சாப்பிட்டால் மூளைக்குத் தேவையான சக்தி அதிகமாக கிடைக்கும். அத்துடன் ஹார்மோன் சுரப்பைத் தூண்டவும் மாதுளை துணை புரிகிறது