முட்டைகோஸ் சாப்பிட்டால் எடை குறைவது நிச்சயம் !!

விலை குறைவாக இருப்பதால் அனைத்து ஹோட்டல்களிலும் பரிமாறப்படும் முட்டைகோஸ், உண்மையில் கீரை வகையை சேர்ந்தாகும். இது பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளில் தோன்றியதாக கருதப்படுகிறது.


முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது. எந்த அளவுக்கு வேக வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு முட்டைகோஸ் சத்துக்களை இழந்துவிடும்.

·         முட்டைகோஸில் இருக்கும் வைட்டமின் சி, பி மற்றும் சல்பர், அயோடின் போன்றவை வயிறு, குடல் உறுப்புகளை சுத்தப்படுத்தி ஜீரணத்தை சுலபமாக்குகிறது.

·         முட்டைகோஸில் உள்ள டார்டரானிக் அமிலம் கொழுப்பை குறைப்பதால், உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு ஏற்ற உணவாக இருக்கிறது.

·         முட்டைக்கோஸில் 'வைட்டமின் கே' அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதியும் நரம்புகளுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

·         தினமும் முட்டைகோஸை உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

இப்போது வெள்ளை, பச்சை, சிவப்பு போன்ற நிறங்களில் முட்டைகோஸ் கிடைக்கிறது. அனைத்திலும் ஒரே அளவிலான சத்துக்களே நிரம்பியுள்ளது.