தங்க நகையை வீட்டில் இந்த இடத்தில் வையுங்கள். பாதுகாப்பும் கிடைக்கும் பெருகவும் செய்யும்!

நாம் அன்றாடம் உழைத்து விட்டு, வீடு திரும்பிய பின்பு நிம்மதியாக தூங்கும் இடம் தான் கட்டில்.


வாழ்க்கையில் இருக்கும் எவ்வளவு பெரிய பிரச்சினைகளாக இருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு, நிம்மதியை தருவதற்கு, அந்த இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரம் தான் தூக்கம். தூங்கும் சமயத்தில் கூட நேர்மறை ஆற்றலானது நம்மிடமே இருக்க வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் நமக்கு சில குறிப்புகளை கூறியுள்ளார்கள். நேர்மறை ஆற்றல் நம்மைச் சுற்றி இருக்க வேண்டும் என்றால் எதிர்மறை ஆற்றலை தடுக்கக்கூடிய பொருட்களைத் தான் நம் உடன் வைத்துக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

கட்டிலுக்கு அடியில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால் நல்ல சிந்தனை உண்டாகும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். பொதுவாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடித்தால் அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். கட்டிலுக்கு அடியில் வைப்பதால் என்ன நன்மை? நாம் தூங்கும் சமயத்திலும் நமது ஆற்றல் குறையாமல் இருக்க இந்த செம்பு பாத்திரம் உதவியாக உள்ளது. செம்பின் மிதமான உஷ்ணத் தன்மையும், அதில் வைக்கப்படும் தண்ணீரில் குளிர்ச்சித் தன்மையும், நம் உயிருக்கு ஆற்றலினை கொடுக்கக்கூடியது. அதாவது நம்மைச் சுற்றி உள்ள பிராண மண்டலத்தை வலுப்படுத்தி நம் மூளையின் செயல் திறனை அதிகரிக்க வைக்கிறது.

நம்மிடம் இருக்கும் தங்க நகைகளை தலையணைக்கு அடியில் வைத்து படுப்பதால் அதிர்ஷ்டம் தேடி வரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். மனிதர்களுடைய எண்ணங்களை ஈர்த்து, அந்த எண்ணங்களை பிரபஞ்சத்திற்கு அனுப்பும் சக்தி இந்த தங்கத்திற்கு உள்ளது என்று கூறுகிறது விஞ்ஞானம். இதனால்தான் மக்கள் தங்கத்தாலான நகைகளை அணிந்து கொள்கிறார்கள். அந்த இறைவனுக்கும் தங்க ஆபரணங்களை சூட்டுகிறார்கள்.

ஏனென்றால் கடவுளின் சிலைகள் தான் பிரபஞ்சத்தின் நுழைவு வாயிலாக இருக்கின்றது. நாம் அந்த கடவுளிடம் வைக்கும் வேண்டுதல்கள் நேரடியாக அந்த பிரபஞ்சத்தையும் அடையும். நல்ல ஆற்றலை ஈர்க்கும் சக்தியானது இந்த தங்கத்திற்கு அதிகமாக உள்ளது. இப்படிப்பட்ட நல்ல ஆற்றலைக் கொடுக்கும் தங்கத்தை தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. நம் எண்ணத்தை அந்த இறைவனிடம் கொண்டு சேர்க்கும் தங்கத்தை தலையணைக்கு கீழே வைத்து படுத்தால் அதிர்ஷ்டம்தான்.

கட்டில் அடியில் வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால் தன்னம்பிக்கை பிறக்கும். இந்த வெள்ளிக்கு மனிதனின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் சக்தியானது உள்ளது. இதற்கும் ஈர்க்கும் தன்மை உள்ளது. ஆனால் தங்கத்தைவிட குறைந்த அளவே ஈர்க்கும் தன்மை கொண்டது. மனிதர்களின் தேவையில்லாத உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் போது, நமக்கான தன்னம்பிக்கையானது தானாகவே உயர்ந்து விடும்.

கட்டிலுக்கு அடியில் இரும்பை வைக்கலாம் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். பொதுவாகவே இரும்பு என்பது எதிர்மறை ஆற்றலை கொண்டது தான். அதாவது முந்தைய காலங்களில் எல்லாம் பெண்கள் தனியாக வெளியே செல்லும் சமயத்தில் இரும்பை தன் கையில் வைத்துக்கொண்டால் எதிர்மறையான காத்து கருப்பு அண்டாது என்று கூறுவார்கள். இரும்புக்கு காந்த ஈர்ப்பு விசையானது உள்ளது. இதேபோல கெட்ட ஆற்றலை நம்மீது அண்டவிடாமல் இரும்பு ஈர்த்துக்கொள்ளும் என்பதற்காகத்தான் இப்படி கூறப்பட்டுள்ளது.

அரச மரத்து இலையை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் தொழிலில் முன்னேற்றம் அடையலாம் என்று கூறியுள்ளார்கள் நம் முன்னோர்கள். பொதுவாகவே இந்த அரச மரத்திற்கு மருத்துவ குணம் அதிகம். அதாவது அரச மரத்தில் இருந்து வீசப்படும் காற்றை சுவாசித்தாலே கர்ப்பம் வலுவடையும் என்று கூறப்படுகிறது. நேர்மறை ஆற்றலைக் கொடுக்கக்கூடிய தன்மையானது இயற்கையாகவே அரச இலைக்கு உள்ளது. ஒருவருக்கு ஏற்படும் சோர்வு, நரம்புத்தளர்ச்சி இவைகளை குணப்படுத்தும் ஆற்றலானது அரச இலைக்கு உண்டு.

ஆரோக்கியமாக இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். ஆனால் நம் முன்னோர்கள் காரண காரியத்தை எல்லாம் கூறாமல், இவைகளை செய்தால் மட்டும் நல்லது என்று கூறிவிட்டு சென்று விட்டார்கள். இதையெல்லாம் ஒரு மூடநம்பிக்கை என்று கூறி நாமும் ஒதுக்கி விட்டோம். பிரச்சனைகளும் நோய்களும் நம்மை தொடர்ந்து கொண்டே வருகிறது. நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.