வீட்டுக்குள் நுழையும் சூரிய ஒளி நோய் தீர்க்கும் தன்மை கொண்டது தெரியுமா? வித்தியாசமான வாஸ்து பலன்!

தற்பொழுது எங்கு பார்த்தாலும் பல அடுக்குகளில் பல்துறை மருத்துவமனைகள் தான் காண்கிறோம்.


நம் முன்னோர்கள் மருத்துவமனைக்கு சென்றது இல்லை. 80 வயது ஆனாலும் கைத்தடி கூட பயன்படுத்தமாட்டார்கள். பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். அவர்கள் தேவையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் வசித்த வீடு தான்.

முன்பெல்லாம் அனைவரின் வீடும் ஒரே மாதிரி தான் இருக்கும். சூரிய ஒளி வீட்டினுள் வரும் வகையில் வீடு கட்டுவார்கள். கிணறு, குளம் போன்றவை சரியான திசையில் இருக்கும். ஆகையால், நோயை எதிர்கொள்ளும் சக்தி அவர்களுக்கு இருந்தது. ஆனால், தற்போது ஒரு சிறிய இடத்தில் பல அடுக்குமாடி வீடு கட்டுகிறார்கள். அதுவும் வாஸ்து பலம் இல்லாமல் கட்டுகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு பலவீனம் அடைந்தால் கணவன்-மனைவி ஒற்றுமையின்மை, உடல் பருமன், வேலையின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுதல், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம்.

தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பலவீனம் அடைந்தால் மன அழுத்தம், பெண்களுக்கு மன பாதிப்பு வருதல், பெண்கள் பூப்படைதலில் பிரச்சனைகள், குழந்தைபேறு தள்ளிப் போகுதல், அடிக்கடி கரு கலைதல், வயிற்றில் அறுவை சிகிச்சை, மன இறுக்கம் அல்லது மன வளர்ச்சி இன்றி குழந்தை பிறத்தல், சளி சம்பந்தப்பட்ட பிரச்சனை, தோல் நோய்கள், புற்றுநோய், மாரடைப்பு, சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு, நரம்பு, முதுகுத்தண்டு பாதிப்புகள், மூட்டு வலி பிரச்சனை, விபத்து போன்றவை இப்பொழுது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.

இப்பொழுது வீடுகள் வாஸ்துபடி உள்ளதா என்பது சந்தேகமே? ஆகையால், அதிக மக்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக நோய்கள் அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறார்களே தவிர, வாஸ்துபடி வீட்டை அமைக்காததால் தான் நோய்களை எதிர் கொள்கிறோம் என்ற விழிப்புணர்வு யாருக்கும் இல்லை.

ஒருவருக்கு ஒரு பிரச்சனை வந்தால் அதே பிரச்சனை மற்றவருக்கும் வந்துவிட்டால் இப்போது எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கின்றது என்று மனதை தேற்றிக்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்.

வாஸ்துபடி வீட்டை அமைத்துக் கொண்டால் நிச்சயம் ஆரோக்கியமாக வாழலாம். இப்பொழுது உடல் பாதிக்கப்பட்டு இருந்தாலும் வாஸ்துபடி வீட்டை மாற்றினால் உடல் ஆரோக்கியம் பெற வழிபிறக்கும்.