பெண் காலின் இரண்டாவது விரல், கட்டைவிரலை விட பெரிதாக இருந்தால் என்ன பலன்..? மற்ற விரலுக்கும் பலன் இருக்குதுங்க

ஒரு மனிதன் தனது பிறப்பு முதல் இறப்பு வரை இந்த மண்ணில் ஆற்ற வேண்டிய நற்செயல்கள், ஆற்றக்கூடாத ஒழக்க கேடுகள் ஆகியவற்றை எடுத்துரைப்பதில் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளது.


இந்து கோட்பாட்டில் பல்வேறு சாஸ்திரங்கள் இருந்தாலும், இதில் முக்கியமானது சாமுத்திரிகா சாஸ்த்திரம். ஏனெனில் இந்த சாஸ்திரம் தான் ஆண் பெண் உறவுகளுக்குடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், மனிதர்களின் உடலில் இருக்கும் மச்சங்களை பொறுத்து அவர்களின் வாழ்வியல் முன்னேற்றம் போன்றவற்றை விளக்குகிறது.

இதில் ஒன்றுதான் பெண்களின் பாதங்கள். அதாவது மனைவியின் பாதம் எவ்வாறு இருக்கிறதோ, அதனைப்பொறுத்தே கணவனின் வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? இருக்காது? என்பதை கூறிவிட முடியும் என்கிறது சாமுத்திரிகா சாஸ்திரம்.

ஐந்து நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள, கால்களின் ஐந்து விரல்கள்

கட்டை விரல் - அங்குஷ்தா

இரண்டாம் விரல் - தர்ஜானி

நடுவிரல் - மத்யமா

நான்காம் விரல் - அனாமிகா

சுண்டுவிரல் - கணிஷ்திகா

ஒரு பெண், சக்ரா, த்வாஜா, ஸ்வஸ்திகா போன்ற குறிகளை தனது பாதத்தில் உள்ளடக்கி வைத்துள்ளார். இதை வைத்து அவரது கணவனின் தலைவிதியை அறிய முடியும்.

பெண்ணின் இரண்டாம் கட்டை விரலை விட பெரியதாக இருந்தால், அப்பெண் கணவனுக்கு அடங்கமாட்டாள். அவர் சொல்வது எதையும் கேட்காமல் தனக்கு தானே முடிவு எடுத்துக்கொள்வதால், திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக கணவனின் நிம்மதி பாதிக்கப்படும்.

கால்விரல்கள் அனைத்தும் மலைபோன்று பெரிய தோற்றதில் இருந்தால், மலையின் பாரத்தை போன்றே, அனைத்து சுமைகளையும் தாங்கி, கணவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பாள். மேலும், நல்ல குணம் படைத்தவளாக இருப்பாள்.

பெண்கள் நடக்கும்போது, அவர்களின் நான்காம் விரலும், சுண்டுவிரலும் பூமியில் படாமல் இருந்தால், அவர்கள் கணவன் மீது நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள். இதனால் வாழ்வில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

மேலும், நான்காம் விரலும், சுண்டு விரலும் அளவில் ஒரே மாதிரியாக இருந்தால், கணவருக்கு தொழில் நஷ்டம் உண்டாகும்.

அனைத்து விரல்களுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருந்தால், இவர்கள் பண விடயத்தில் ஊதாரியாக இருப்பார்கள். கட்டுக்கடங்காமல் செலவுகளை செய்வார்கள்.

1.மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.

2.பாதங்கள் சிவந்த நிறமுடையனவாகவும் தசை வளம் மிக்கனவாகவும், மென்மையானவையாகவும் மழமழப்பாகவும் நன்றாகப் படியக் கூடியனவாகவும் எப்போதும் வெதுவெதுப்பானவையாகவும், அமையப் பெற்ற பெண்கள் பெரும் பேறுகளைப் பெற்றுத் திகழ்வார்கள்.

3.பாதங்கள் வெண்மையாகவோ, தங்கத்தைப் போன்ற நிறமுடையவனவாகவோ அமைந்திருக்கும் மங்கையர்கள் மகா பாக்கியசாலிகளாகவும் கணவனுக்கு ஏற்ற நல்லதொரு மனைவியாகவும் அன்னதானம் செய்பவர்களாகவும் பெரியோர்களைப் பக்தியுடனும், மரியாதையுடனும் ஆதரிக்கும் நற்குணமுடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய நதிகளில் நீராடிப் புண்ணிய திருத்தலங்களுக்கும,; திருக்கோயில்களுக்கும் சென்று தெய்வ தரிசனம் செய்வதில் ஆர்வமுடையவர்களாகவும் திகழ்வார்கள். சாந்த சுபாவமும், தெய்வ பக்தியும் மிக்க இவர்கள், கணவரின் பணிவிடைகளை அன்புடனும் பொறுப்புடனும் செய்யும் நற்குண நற்பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

4.பாதங்கள் முரடாகவும் கெட்டியாகவும் நிறம் மாறியும் காணப்படுவது போகவிச்சை குறைவைக் குறிப்பதாகும். வெண்மை நிறத்துடனும், கோணலாகவும், வறண்டும் காணப்படுவது வறுமையைக் குறிக்கும். வெண்மை நிறமாகவும் சமமில்லாமலும் கல்லைப் போன்று கடினமாகவும் இருந்தால் துன்பங்கள் அதிகமாகும். கருமை நிறமாக இருப்பின் நல்ல அமைப்புகளைக் கெடுத்துவிடும்.

5.பாதங்களைப் பச்சை இலையின் பழுப்பு நிறமுடையனவாகப் பெற்றவர்கள் கொடூர மனமுடையவர்களாகவும், நல்லோரைப் பழிப்பவர்களாகவும் தெய்வ நம்பிக்கையற்றவர்களாகவும, நாத்திகம் பேசுபவர்களாகவும் இருப்பதோடு உடல் தூய்மை, மனத்தூய்மை, ஆத்ம சுத்தம் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.

6.மென்மையான பாதங்களை உடைய மங்கையர் சகல விதமான சுகங்களையும் அனுபவிப்பார்கள். அவர்களின் பிறவி யோகத்தால் அவர்களுடைய வயது நிரம்பிய தாய், தந்தையர் கணவர் புத்திரர்கள் ஆகியவர்கள் நற்பயன்களை அடைவார்கள். இவர்கள் எப்போதுமே நற்காரியங்களைச் செய்வதிலேயே கவனம் செலுத்து வார்கள்.

7.பாதங்கள் அடிக்கடி வியர்வை வடியும்படி இருப்பவர்கள். வறுமையில் உழல்வதோடு மிக அதிகமான காம வேட்கையுடையவர்களாகவும், நடத்தை தவறக் கூடியவர்களாகவும், அற்பத்தனமான மனப் போக்கை உடையவர்களாகவும், எளிதில் ஏமாறக் கூடியவர்களாகவும் மற்றவர்களை ஏமாற்றக் கூடியவர்களாகவும், தன்னம்பிக்கையற்ற வெகுளிகளாகவும் இருப்பார்கள்.

8.பாதங்கள் தடித்துப் பருத்திருப்பவர்களும் உள்ளங்கால் பூமியில் பதியும் படியாகத் தட்டையாக இருப்பவர்களும் மிகவும் தேய்ந்த உள்ளங்கால்களை உடையவர்களும் வீண் அபவாதங்களையும், பழிச் சொற்களையும் ஏற்க வேண்டியவர்களாவார்கள். வெறுப்படையும் இயல்பும், தயவு தாட்சண்யமற்ற மனப் போக்கும் கொண்டவர்களாக இருப் பார்கள்.

9.பாதங்கள் பள்ளமாக இருப்பவர்கள் கணவனால் சில காலம் கை விடப்பட வேண்டிய நிலையை அடைவார்கள். சிலர் பல புருஷர்களை சுக போகத்திற்கும், சுய தேவைப் பூர்த்திக் காகவும் நாடுபவர்களாக இருப்பார்கள்.

10.உள்ளங்காலிலுள்ள ரேகைகள் தெளிவாகவும் மேல்நோக்கிச் செல்வனவாகவும் அமையப் பெற்றவர்கள். அன்பு மிக்க நல்லதொரு கணவனையடைவார்கள்.

பெண்களின் பாதம் வட்டமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கணவனுக்கு அதிர்ஷ்டமான வாழ்க்கை தான்.