நீங்கள் அமாவாசையில் பிறந்தவரா? 30 வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கை நிலை அட்டகாசமாக மாறும்! எப்படி தெரியுமா?

பலருக்கும் இருக்கும் சந்தேகம் அமாவாசையில் பிறந்தால் நல்லதில்லை, அப்பாவுக்கு ஆகாது என்பதுதான்.


இதற்குக் காரணம் ஜோதிடர்கள் சிலர் இப்படிச் சொல்லிக் குழப்பி விடுவதுதான். அதன் உண்மை காரணத்தினை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக திதிகளுக்கு என்றே ஒரு தோஷம் உள்ளது. அதாவது இந்த தோஷத்தினை திதி சூனியம் என்று சொல்லுவார்கள். இந்த திதி சூனியம் அனைவருக்கும் வரும்.

ஆனால் அமாவாசை மற்றும் பௌர்ணமியில் பிறந்தவர்களுக்கு மட்டும் திதி சூனியம் என்பது இல்லை. மாறாக அமாவாசையில் பிறந்தவர்களுக்கு யோகத்தினை கொடுக்கின்றன. 

ஜோதிட ரீதியில் பார்க்கும்போது சூரியனை ஆத்மகாரகன் என்றும் தந்தை என்றும் ஆத்மபலம் என்றும் உடல் பலம் என்றும் அழைக்கின்றனர். சந்திரனை மனோகாரகன் என்றும் மன பலம் மிக்கவன் என்றும் தாய் என்றும் சொல்கின்றனர். பொதுவாக யோகம் என்றால் இணைதல் என்பதைத்தான் குறிக்கும்.

அதாவது இரு கிரகங்களான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைவது என்பது மிகவும் அபூர்வம். அந்த நாளைத்தான் அமாவாசை என்கிறோம். அமாவாசையன்று பிறந்தவர்களுக்கு இந்த யோகம் உண்டாகிறது. மாதத்தில் ஒரு முறை இந்த அமாவாசை திதி வருகிறது.. 

அமாவாசையில் பிறந்தவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தங்கள் 30 வயதுக்கு மேல்தான் தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்ற நிலை உள்ளது. அதாவது வாழ்வின் ஆரம்ப காலத்தை விட பிற்பகுதியில் மிகவும் உயர்ந்த நிலைக்குச் செல்கிறார்கள். வாழ்வில் அடித்தளத்திலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு தனது முயற்சியால் இவர்கள் வளர்ந்து வாழ்வில் உயர்நிலையை அடைவார்கள்.

அமாவாசையில் பிறந்தவர்களுக்கு சூனியம் ஏவல் என்பது வைக்க முடியாது என்றும் சொல்லப்படுவது உண்டு. இந்த திதியில் தான் நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கின்றனர். சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருக்கும்போது இரு பலமும் ஒன்றாக சேரும். அதாவது சிவனும் சக்தியும் ஒன்று சேர்வதைக் குறிக்கும். அதுவே அமாவாசை தேதியில் பிறந்தவர்களுக்கு தனித் தன்மையை தருகிறது. ஜாதக ரீதியில் கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் பொழுது அதன் பலம் இரட்டிப்பாகிறது. 

ஒரு சிலருக்கு மட்டும் அமாவாசையில் பிறந்தால் யோகம் இருப்பதில்லை. இதற்கு காரணம் எந்த ஸ்தானத்தில் சூரியன் சந்திரன் இணைந்து இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும். ஒரு சில ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருக்கும். ஆனால் அந்த திதியை கடந்து இருக்கலாம். அந்த ஸ்தானம் கேந்திரமாக இருந்திருக்காது அல்லது அந்த அமாவாசை திதியில் அன்று சூரியன் பலவீனப்பட்டு இருந்திருக்கலாம். சூரியன் நீச்சம் பெறுவது மற்றும் மறைவிடங்களில் இருப்பது உள்ளிட்டவற்றால் இந்த பலன் ஏற்படுகிறது.  

அமாவாசை திதி ஒருவர் ஜாதகத்தில் அதாவது சூரியனும் சந்திரனும் இணைந்து இருக்கும் பொழுது அந்த ஸ்தானம் 3 6 11-ஆம் இடமாக இருந்தால் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அந்த ஸ்தானத்தில் சூரியன் நீச்சம் பெறாமல் இருந்தால் மிகவும் சிறப்பு. அன்று சந்திரனும் நீச்சம் பெறாமல் இருப்பதும் அமாவாசை திதியில் பிறந்தவர்களுக்கு மிகவும் யோகத்தை தருவதாக அமையும். மாறாக இருக்குமேயானால் பெரிய அளவில் அவர்கள் சாதிப்பார்கள் என்று சொல்ல இயலாது.