துணி அடுக்கும் அலமாறியில் கட்டு கட்டாக ரூ.32 கோடி..! யார் இந்த கரூர் ஷோபிகா இம்பெக்ஸ் சிவசாமி?அதிர்ச்சி தகவல்கள்!

கரூர் மாவட்டத்தில் கொசுவலை நிறுவனம் ஒன்றில் 5வது நாளாக நடக்கும் சோதனையில் ரூ.435 கோடி வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததுள்ளது. மேலும் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த 14-ம் தேதி தொடங்கிய சோதனை, 5-ம் நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதுவரை சோதனையிட்டதில்,  

கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் செயல்படும் ஷோபிகா கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 14ம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தை சிவசாமி என்பவர் நடத்திவருகிறார். இந்த நிறுவனத்துக்கு மேலும் பல கிளைகள் உள்ளன. இங்கிருந்து ஆப்பிரிக்கா, தாய்லாந்து, சீனா, மலேசியா, இலங்கை நாடுகளுக்கு கொசுவலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலம் உள்ளன.

மேலும் காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் நடத்திவருகிறார் சிவசாமி. 2017-ம் ஆண்டு மத்திய அரசின் `எக்ஸ்போர்ட் எக்ஸலன்ஸ்' விருதையும் பெற்றுள்ளார் தொழிலதிபர் சிவசாமி. இந்த நிறுவனம் வருமானவரி ஏய்ப்பு செய்து வருவதாக வந்த தகவலில் ஐ.டி. ரெய்டு நடத்தப்பட்டது.

கரூரில் உள்ள சிவசாமி வீட்டில் 2000 மற்றும் 500 ரூபாய் நேட்டுகள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.32 கோடி ரூபாய் இருந்தது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சோதனையில் இதுவரை கணக்கில் காட்டதாத 32 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் 435 கோடி ரூபாய்க்கு அளவுக்கு வரி ஏய்ப்பும் செய்திருப்பதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளது.