நேரில் பார்க்க ரூ.5000! கால்களை தொட ரூ.10000! கல்கி பகவான் ஆசிரமத்திற்குள் ஐடி அதிகாரிகள் புகுந்த பின்னணி! ரூ.100கோடி?

சாதாரண எல்ஐசி ஏஜென்டாக இருந்து, தற்போது பல்லாயிரம் கோடிக்கு அதிபதியாகியது எப்படி? என கல்கி ஆசிரமத்தில் வருமானவரித் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆந்திரம் மாநிலத்தில் அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக கல்கி ஆசிரமம் கட்டப்பட்டது. இதில் சாதாரண எல்ஐசி ஏஜென்டாக இருந்துவந்த விஜயகுமார், தனது பெயரை கல்கி பகவான் என கூறிக்கொண்டு, தன்னைத் தானே கல்கி அவதாரம் எனக் கூறி புராணங்களின் கதைகளை ஆசிரமத்திற்கு வரும் பொதுமக்களிடம் கூறி வந்துள்ளார். 

இவரை தரிசிக்க ஐந்தாயிரம் ரூபாய் நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் இவரது மனைவி புச்சம்மா, தனது பெயரை அம்மா பகவான் என மாற்றிக்கொண்டு அவரும் இதே வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் பாதபூஜை செய்ய ஆசிரமத்திற்கு வருபவர்களிடம் பல்லாயிரக்கணக்கில் வசூலிக்கப்படுகிறது. 

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 40 இடங்களில் கல்கி ஆசிரமம் மற்றும் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் வருமான வரித் துறைக்கு கிடைத்த புகாரின் பேரில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் இயங்கி வந்த கல்கி ஆசிரமத்தின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு எந்த ஒரு பெயர் பலகையும் வைக்கப்படாமல் உரிய சான்றிதழ்கள் பெறாமல் அலுவலகம் நடத்தப்பட்டு வந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை சோதனையிட்டதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. 

மேலும் ஆந்திராவில் உள்ள ஆசிரமத்திலும் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில், 100 கோடிக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரிய வந்ததாக தகவல்கள் வெளிவருகின்றன. 

முழுவிவரங்கள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டவுடன் கல்கி பகவான் எனும் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி, மகன், மருமகள் என அனைவரும் கைது செய்யப்படுவர் என்பதும் தெரியவந்துள்ளது.