வில்லங்கத்தில் சிக்கினாரா விஜய்..? ஐ.டி. ரெய்டில் சிக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் அதிரடியாக நுழைந்து விஜய்யிடம் விசாரணையை தொடர்ந்து வருமான வரித்துறை, அவரை வம்படியாக வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வீட்டிலும் இப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு பேர் அதிரடி சோதனை நடத்திவருகிறார்கள். இன்று பிற்பகலில் இந்த சோதனை தொடங்கியது. 

பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். குழுமத்தில் இன்று காலை நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக விஜய் அகப்பட்டுள்ளார் என்பதாகத் தகவல் வெளியாகிறது. ஆனால், அவரிடம் வருமான வரித்துறையினரிடம் தெரிவித்த தகவல்களில் முரண் இருப்பதாக சொல்லப்பட்டு, அவர் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

இதுதவிர, இன்று விஜய்யை விசாரணை செய்வதற்கு முன்பு, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதும், விஜய் வீட்டில் ரெய்டு நடப்பதும் விஜய் ரசிகர்களை ஏகத்துக்கும் டென்ஷன் ஆக்கியுள்ளது. இதுதவிர, ஃபைனான்சியர் அன்புசெழியன் வீட்டிலும் ரெய்டு நடந்துவருகிறது. ஆனால், இதுவரை இந்த ரெய்டு குறித்து ஐ.டி. துறையினர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.