மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை..! உதறித் தள்ளிவிட்டு இளம் பெண் செய்த பெருமைமிகு வேலை..! என்ன தெரியுமா?

கிடைக்கவிருந்த பல லட்சம் ரூபாய் சம்பளத்தை தூக்கி எறிந்துவிட்டு குரூப்-1 தேர்வில் முதல் முயற்சியிலேயே இளம்பெண் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று தமிழகத்தில் குரூப் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் முடிவுகள் வெளியாகியது. கிட்டத்தட்ட 362 பேர் இந்த குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் 257 பேர் பெண்களாவர். 

அர்ச்சனா என்ற பெண் இந்த குரூப்-1 தேர்வில் முதலிடத்தை பெற்றுள்ளார். இதில் வியக்கத்தக்க செய்தி என்னவென்றால் இவர் ஏற்கனவே ஒரு ஐடி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்று வந்தார் என்பதாகும்.கல்லூரி வளாகத்திலேயே நடைபெற்ற பல்வேறு நேர்காணல்களில் தேர்ச்சி பெற்று புகழ்பெற்ற ஒரு ஐடி நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இருப்பினும் இவருக்கு அரசு வேலை வேண்டுமென்ற உத்வேகம் அதிகளவில் இருந்தது. 

சென்ற ஆண்டு இவர் தன்னுடைய பணியை ராஜினாமா செய்தார். முழுவீச்சில் குரூப்-1 தேர்வுக்கு தயாராக தொடங்கினார். தன்னுடைய விடாமுயற்சியின் வெளிப்பாடாக, குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றது மட்டுமின்றி முதலிடத்தையும் பிடித்துள்ளார். தன்னுடைய முதல் முயற்சியிலேயே இத்தகைய வெற்றியை பெற்றுள்ளார் என்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணமுள்ளன. தன்னுடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பினாலும், முறையான தொடர் பயிற்சியினாலும் வெற்றி பெற்றுள்ளதாக அர்ச்சனா கூறியுள்ளார். மேலும் இதற்காக அவர் தினமும் 10 மணி நேரம் பயிற்சி செய்து வந்தார் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படுவோருக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.