ரஜினி ஒரு கந்துவட்டி வியாபாரியா..? உண்மையை வெளியிட்ட ஐ.டி. துறை

என்னமோ செய்யப்போனா, என்னமோ நடக்குது என்பார்களே, அப்படித்தான் ஆகிப்போனது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விவகாரத்தில்.


ஆம், அவர் மீது அத்தனை வழக்குகளையும் காலி செய்து அவரை ஒரு நல்லவராக, வல்லவராக மக்கள் மத்தியில் கொண்டுபோய் நிறுத்தலாம் ;என்று பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. அதனாலே, நீண்ட நாளாக பென்டிங் இருந்த ஐ.டி. வழக்கை சரியான காரணம் சொல்லி மூடவும் வைத்தது. ஆனால், அப்போது கசிந்த தகவல்கள்தான் ரஜினி எனும் கந்துவட்டிக்காரனை மக்களிடம் அடையாளம் காட்டியுள்ளது.

ரஜினிகாந்த் பெரிதாக எந்த தொழிலும் ஆரம்பிக்கவில்லை. ஆனால், பலருக்கும் பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார் என்று ஏற்கெனவே சொல்லப்பட்ட விவகாரம்தான். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் காட்ட முடியாமல் இருந்தது. அப்படியொரு ஆதாரத்தை ரஜினியே காட்டிவிட்டார்.

ஆம், கடந்த 2002 _ 2003 நிதியாண்டில், 2.63 கோடி ரூபாய் கடன் வழங்கிய ரஜினி, அதன்மூலம் 1.45 லட்ச ரூபாய் கந்து வட்டியாக ஈட்டியிருக்கிறார். இதற்கு முறையாக வரி செலுத்தியும் இருக்கிறார். ஆனால், அதன்பிறகு 2004 _ 2005 ஆண்டில் 1.71 கோடி ரூபாய் கடன் வழங்கிய ரஜினி, கொடுத்த பணம் வசூலாகவில்லை என 33.93 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி வரி செலுத்தாமல் எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

இந்த விஷயம்தான் சிக்கலாகி, பணம் கொடுத்து வட்டி வாங்கினால் அது கந்துவட்டியா என்று அப்பாவியாக கேள்வி கேட்டிருக்கிறார். சிஸ்டம் சரியில்லை ரஜினி சார். கந்து வட்டிக்காரனை பிடுச்சு உள்ளே போடுங்க சார்.