சந்திராயன்-2 ஏவப்படுவதை நேரில் பார்கணுமா? அப்போ நீங்க செய்ய வேண்டியது இது தான்!

சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை பார்ப்பதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டிய செய்தியானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன்-2 என்னும் வின்கலம் நம் நாட்டில் இருந்து ஏவப்பட உள்ளது. வருகிற 15-ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் அமைந்துள்ள சதீஷ் தவான் ஸ்பேஸ் செண்டர் என்ற இடத்திலிருந்து சந்திராயன்-2 விண்கலம் ஏவப்பட போகிறது.

இஸ்ரோ நிறுவனம் இந்த விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த விண்கலத்தை ஏவும் போது அங்குள்ள கேலரியில் இருந்து பார்ப்பதற்கு முன் பதிவு செய்ய வேண்டும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதற்காக தனிப்பட்ட முறையில் எந்த ஒரு இணையதளமும் தெரிவிக்கப்படவில்லை. இஸ்ரோ நிறுவனத்தின் இணையதளமே பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜூலை மாதம் 15-ஆம் தேதி ஏவப்படும் சந்திராயன்-2 செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது. ராக்கெட்கள் மற்றும் விண்கலன்களில் இந்தியா செய்துள்ள மகத்தான சாதனைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக இது அமைய போவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.