மைதானத்தில் தகாத முறையில் நடந்த டிவி நடிகை! IPL போட்டியில் பரபரப்பு!

தெலங்கானாவில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது, போட்டியை கண்டுகளிக்க விடாமல் ரசிகருக்கு தொல்லை கொடுத்த தெலுங்கு டிவி நடிகை உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


உப்பல் விளையாட்டு மைதானத்தில் நேற்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் ஆட்டம் நடைபெபெற்றது. இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வந்தனர்.

போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் விளையாட்டை காண சென்றிருந்த டிவி நடிகை பிரஷாந்தி மற்றும் அவரது தோழிகள், நண்பர்கள் என 5 பேர், துள்ளிக்குதித்து சத்தம் எழுப்பியுள்ளனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த ரசிகருக்கு போட்டி தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து ரசிகர் ஒருவர் நடிகையை உட்கார்ந்து பார்க்குமாறு கூறியுள்ளார். ஆனால் நடிகை அதனை காது கொடுத்து கேட்கவில்ல. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர் நடிகையை கண்டித்துள்ளார். 

அப்போது ரசிகரை மிரட்டிய நடிகை பிரஷாந்தி, ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த ரசிகர் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரில், நடிகை உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.