IPL முதல் போட்டி : CSK vs RCB - களமிறங்கும் வீரர்கள் பட்டியல் இதோ!

இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ipl போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ளது. இந்த சீஸனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதவுள்ளது.


இது வரை ஒரு முறை கூட கோப்பையை பெங்களூரு அணி கைப்பற்றவில்லை.அந்த அணியில் மிக சிறந்த வீரர்கள் இருந்தாலும் கூட விராட் கோஹ்லியால் ipl தொடரை வெல்ல இயலவில்லை.இந்த முறை பெங்களூரு அணியின் முதல் போட்டியே பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் என்பதால் ரசிகர்களுக்கிடையே ஆவலும் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.இன்று நடக்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உத்தேச அணியை இனி காண்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (உத்தேச அணி )

1. ஷான் வாட்சன் 2.டு பிளெஸ்ஸிஸ் 3.சுரேஷ் ரெய்னா4.அம்படி ராயுடு 5. டோனி 6.கெதர் ஜாதவ் 7. பிராவோ 8. ஜடேஜா 9.தீபக் சஹர் 10.இம்ரான் தாஹிர் / சான்டநெர் 11. ஷார்துல் தாகூர் /மோஹித் சர்மா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (உத்தேச அணி)

1.பார்திவ் படேல் 2.மோயின் அலி 3.கோஹ்லி 4. டீ வில்லியர்ஸ் 5. ஹெட்மயேர் 6. சிவம் டுபெ 7. வாஷிங்டன் சுந்தர் 8. டிம் சௌதீ 9.உமேஷ் யாதவ் 10. சஹால் 11. சிராஜ்/சைனி 

புதிதாக களமிறங்கும் வீரர்கள் :

சென்னை சூப்பர் கிங்ஸ் : சென்னை அணியை பொறுத்தவரை மோஹித் சர்மா இன்றைய போட்டியில் புதிதாக களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவர் ஏற்கனவேய மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை அணியில் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது .

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயேர் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு முதல் முறையாக களமிறங்குகிறார்.இவர் கிட்டத்தட்ட கிறிஸ் கேயில் போன்று அதிரடியாக விளையாடிய கூடியவர்.இவரை கலத்தில் அதிக நேரம் நின்று விடாமல் சென்னை பவுலர்ஸ் பார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வெற்றியை தனது வசமாக்கி விடுவார்.

 இந்த இரு அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி சரியாக  8 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த ipl  தொடரை ஒளிபரப்ப உள்ளது .