பாத்திமாவை தொடர்ந்து ஐஐடியில் மேலும் ஒருவர் தற்கொலை! இந்தமுறை ஜப்பான் மாணவர்! அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சி சம்பவம்!

கவுகாத்தி ஐஐடியில் ஜப்பான் நாட்டு மாணவர் ஒருவர் குளியலறையில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தியில் உள்ள இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான இந்திய தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. 

ஜப்பான் நாட்டின் ஜிஃபு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது பணி அனுபவ பயிற்சிக்காக இன்டர்ன்ஷிப் பயிற்சியை கவுகாத்தி ஐஐடியில் மேற்கொண்டு வந்தார்.  

இந்நிலையில் வருகிற நவம்பர் 30-ஆம் தேதி இவருடைய பயிற்சி காலம் முடியவடைய இருந்தது. இதற்கிடையில், ஜப்பான் மாணவர் நேற்றைய தினம் மதியம் கல்லூரி விடுதியில் உள்ள குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  

இதைக்கண்ட சக விடுதி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கும் தெரிவிக்கபட்டது.  

இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜப்பான் மாணவர் இறப்பு குறித்து டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

ஏற்கனவே மெட்ராஸ் ஐஐடி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள் தற்போது மற்றொருவர் இதுபோன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது மேலும் அச்சத்தை கிளப்பியுள்ளது.