பிள்ளைகளால் பிரச்சனையா?, இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்

சில பேரது வீட்டில் எல்லா வகையான வசதிகளும் இருக்கும். செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.


ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் மட்டும் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி அடையவே முடியாது. அதாவது படிப்பில் மந்தமாக இருக்கலாம். நன்றாக படிக்கும் பிள்ளைகளாக இருந்தால், வேலை கிடைக்காமல் இருக்கலாம். வேலை கிடைத்தால், நல்ல சம்பளம் கிடைக்காது. ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள். இவையெல்லாம் அமைந்துவிட்டால் பெற்றவர்களின் பேச்சிற்கு செவிசாய்க்க மாட்டார்கள்.

வீட்டிற்கு அடங்காமல் இருப்பார்கள். ஏதாவது ஒருவகையில் அவர்களால் குடும்பத்திற்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். ஏதாவது தொழில் செய்து நஷ்டத்தை உண்டாக்கி விடுவார்கள். அனாவசியமாக செலவு செய்வார்கள். ஏதாவது ஒரு பிரச்சினையை பெற்றவர்களுக்கு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்கும்? சிலருக்கு ஜாதகத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பரிகாரம் செய்யலாம். சிலருக்கு என்ன பிரச்சனை என்று புரியாமல் பலவிதமான பரிகாரங்களை செய்து வருவார்கள். ஆனாலும் பிரச்சனை மட்டும் தீர்ந்த பாடாக இருக்காது.

இப்படிப்பட்ட சில பிள்ளைகளால், பெற்றோர்கள் சொத்தை கூட இழந்திருப்பார்கள். இதற்கு பெற்றோர்கள் செய்யக்கூடிய ஒரு சுலபமான சிறிய பரிகாரம் நம் முன்னோர்களால் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன பரிகாரம் என்பதை பற்றி நாமும் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு டம்ளர் அளவு சுத்தமான பசும்பாலை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் தேனை சேர்த்து கொண்டுபோய் அரச மரத்து வேரில் ஊற்றி விடவேண்டும். இதை பிள்ளையின் அப்பா செய்வது மிக சிறப்பு. அப்பாவினால் செய்ய முடியாத பட்சத்தில், அம்மா செய்யலாம். இந்த பரிகாரத்தை ஞாயிற்று கிழமை தோறும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும்.

சில அரசமரத்தடியில் பிள்ளையார் இருப்பார். அப்படி இருந்தால் இன்னும் சிறப்பு. பிள்ளையாரை மூன்று முறை சுற்றி வந்து, மூன்று தோப்புகரணம் போட்டு மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து 11 வாரம் செய்து வந்தாலே போதும். உங்களது பிள்ளையின் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படுவதை உங்களால் உணர முடியும். பிள்ளையார் இல்லாத அரச மரத்தடியிலும் பாலை ஊற்றலாம். தவறு ஏதும் இல்லை.

நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களாக இருந்தாலும் அல்லது பெற்றோர்கள் செய்த பாவங்களாக இருந்தாலும், அது நம்முடைய அடுத்த சந்ததியினரை போய் சேருவதாக சில நூல்கள் கூறுகின்றது. இப்படியிருக்க கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சாபம் கூட உங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கும். இந்த பாவங்களைப் போக்கும் சக்தியானது இந்த சிறிய பரிகாரத்திற்கு இருக்கிறதா என்று சந்தேகப் படாதீர்கள். நம்பிக்கையோடு செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு.