டோனி ஸ்டம்ப் பின்னால் இருந்தால் யாரும் கிரீஸை தாண்டாதீங்க- ஐசிசி அறிவுரை

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி நியூஸிலாந்திற்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து வீரர் நீஷமை ரன் அவுட் செய்தது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது.


இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஐசிசி டோனி விக்கெட் கீப்பிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் யாரும் க்ரீஸை விட்டு தாண்டாதீர்கள் என அறிவித்துள்ளது. இந்த கருத்தானது நேற்று டோனி நியூஸிலாந்து வீரர் நீஷமை ரன் அவுட் செய்ததை நினைவூட்டும் வகையில் உள்ளது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் வென்றுள்ளது. இந்த போட்டியில் டோனி செய்த ரன் அவுட் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த ரன் அவுட் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த போட்டியில் நியூஸிலாந்து சேஸ் செய்து கொண்டிருந்த போது 36 வது ஓவரை இந்திய அணியின் கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்து நியூஸிலாந்து பேட்ஸ்மேன் நீஷமின் காலில் பட்டது.

இந்திய அணியின் வீரர்கள் நடுவரிடம் எல் பி டபிள்யு அப்பீல் செய்தனர். இந்த நேரத்தில் நீஷம் ரன் எடுக்க முயற்சித்தார். அனால் பந்து டோனியின் அருகே தான் உள்ளது என அறியாமல் அவர் ஒரு அடி எடுத்து வைத்தார். பின்னர் பந்து டோனியின் அருகே தான் உள்ளது என்பதை அறிந்து திரும்ப முயன்றார் நீசம். அனால் அதற்குள் டோனி பந்தை நேரடியாக ஸ்டம்பில் வீசி அவரை ரன் அவுட் செய்தார்