கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு அபராதம்! ஐசிசி அதிரடி நடவடிக்கை! காரணம் என்ன தெரியுமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்காததால் இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்ததால் சூப்பர் ஓவர் சுற்றுக்கு சென்று சூப்பர் ஓவர் முடிவில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக வந்து வீசும் போது குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை.

பந்து வீச்சாளர்களுடன் செய்யப்பட்ட விவாதம், பில்டிங் மாற்றியமைப்பது போன்ற காரணங்களால் பந்துவீச்சு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியவில்லை.கடைசி 2 ஓவர்கள் வீசுவதற்கு இந்திய அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் ஐசிசி இந்திய அணி வீரர்களுக்கு சம்பளத்தில் 40 சதவீதம் அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டி20 தொடரில் இந்திய அணி ஏற்கனவே நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.