அம்பதி ராயுடு பந்து வீச தடை: ஐசிசி அறிவிப்பு!

அம்பதி ராயுடு கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச ஐசிசி தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் அம்பதி ராயுடு பகுதி நேர பந்து வீச்சாளராக செயல்பட்டார். அந்த போட்டியில் இரண்டு ஓவர்கள் வீசிய அவர் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை

. சுழற்பந்துவீசிய ராயுடு பந்து வீசிய விதம் சர்ச்சைக்குள்ளாகியது. போட்டி நிர்வாகிகள் மூலம் ராயுடு பந்து வீசும் விதம் ஐசிசி யிடம் கொண்டுசெல்லப்பட்டது. ஐசிசி ராயுடுவிற்கு அவர் பந்து வீச்சை சோதிக்கும் வகையில் பந்து வீச்சு சோதனைக்கு அவரை 14 நாட்களுக்குள் வருமாறு அழைத்திருந்தது.

ராயுடு ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருவதால் பந்து வீச்சு சோதனைக்கு செல்லவில்லை. இதனால் ஐசிசி அம்பதி ராயுடுவிற்கு பந்து வீச தடைவிதித்துள்ளது.

 ராயுடு பந்து வீசும் விதம் கிட்டத்தட்ட இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை போல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பதி ராயுடு பந்து வீச ஐசிசி தடை செய்தது அவருக்கும் இந்திய அணிக்கும் எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அம்பதி ராயுடு பகுதி நேர பந்து வீச்சாளர். அவரின் பேட்டிங்க்கிற்காக மட்டுமே அவர் இந்திய அணியில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.