இந்திய போர் வீராங்கனைகளுக்கு சல்யூட்! போர் ஹெலிகாப்டரை முதல் முறை இயக்கி சாதனை!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள Mi-17 V5 ஹெலிகாப்டரை முழுக்க முழுக்க பெண்களே இயக்கி புதிய சாதனை படைத்துள்ளனர்.


லெப்டினன்ட் பரூல் பரத்வாஜ் (கேப்டன்), பறக்கும் அதிகாரி அமன் நிதி, மற்றொரு லெப்டினென்ட் ஹினா ஜெய்ஸ்வால் ஆகியோர் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளனர். பொதுவாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை ஆண்கள் மட்டுமே இயக்குவது வழக்கம்.

பெண்களை இயக்க அனுமதித்தாலும் கூட உடன் ஆண்கள் கட்டாயம் இருப்பார்கள். இந்த மரபை மீறி சாதித்துள்ளனர் விமானப்படையின் மூன்று பெண்கள். விமானப்படையின் தென் மேற்கு கட்டுப்பாட்டு பகுதியில் நடைபெற்ற போர் ஒத்திகையாக பெண்கள் மூன்று பேரும் ஹெலிகாப்டரை இயக்கியுள்ளனர். பஞ்சாப்பின் முகரியன் பகுதியை சேர்ந்த பரூல் பரத்வாக் Mi 17 ரக ஹெலிகாப்டரை இயக்கிய முதல் பெண் விமானி ஆவார்.

ஹினா ஜெய்ஸ்வால் இந்திய விமானப்படையில் பணியாற்றும் முதல் விமானப் பொறியாளர் என்பது அனைத்து பெண்களுக்கும் பெருமிதம் தரவல்லது. இதே போல் அமன் நிதி அவரது மாநிலமான ஜார்கண்டில் இருந்து வந்துள்ள முதல் விமானப்படை விமானி ஆவார். 

இப்படி பலவேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த மூன்று பெண்களும் இணைந்து ஹெலிகாப்டரை இயக்கி புதிய வரலாறு படைத்துள்ளதாக விமானப்படை கூறியுள்ளது.