விமானப் படை விமானி அபிநந்தன் நாளை விடுதலை! பாகிஸ்தான் அறிவிப்பு

விடுதலை


கமாண்டர் அபிநந்தனை நாளை விடுவிக்க உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

இந்திய விமானப்படை விமானி அபினந்தன் நாளை விடுதலை - இம்ரான்கான்

நாளை விடுவிக்கபடுகிறார் இந்திய விமானி அபிநந்தன்

பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானி அபிநந்தனை பாதுகாப்பாக விடுவிக்க இந்திய அரசு வலியுறுத்தி வந்த நிலையில், பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநந்தன் விடுதலை குறித்த தகவல் வெளியானதும் அவரது உறவினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அருகே சேலையூரில் அபிநந்தன் வீட்டில் அவர்களின் உறவினர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்து வருகின்றனர் .இதே போல் அப்பகுதி மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

ராவல்பிண்டியில் உள்ள அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டு வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்.