கணவன் இறந்த துக்கத்தில் மனைவி உடனிருந்த சம்பவமானது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓயாமல் உழைத்த கணவன் சுருண்டு விழுந்து பலி..! தகவலை கேட்ட நொடி உயிரை விட்ட மனைவி! நெகிழ வைத்த ஜோடி!

நாகை மாவட்டத்தில் நாகூர் பெருமாள் கீழ் வீதி என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய வயது 70. இவர் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் மாலா. மாலாவின் வயது 65. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காமராஜ் இரவு பகலாக வேலைப்பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று மாரடைப்பால் காமராஜர் இறந்துவிட்டார். இதனால் பதறிப்போன மாலா மயங்கி விழுந்துள்ளார். அவரது மகனான சத்தியசீலன் ஆட்டோவில் இருவரையும் ஏற்றுக்கொண்ட அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காமராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலா மீண்டும் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாலாவும் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சத்தியசீலன் அனாதையாக்கி விட்டு இருவரும் இறந்துவிட்டதாக கதறி அழுதுள்ளார். இந்த சம்பவமானது மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியது.