இறுதி ஆசை நிறைவேறாமலேயே மரணித்த நடிகர் முரளி..! மனைவி தற்போது வெளியிட்ட கண்கலங்க வைக்கும் தகவல்!

ஜெயலலிதாவை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட நடிகர் முரளி அதற்கு முன்பே இறந்து போன செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் முரளி 90-களில் வெளியான படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் பல நூறு நாட்களுக்கு ஓடி மாபெரும் வெற்றி அடைந்துள்ளன. இதயம், பகல்நிலவு, அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க ஆகிய திரைப்படங்களில் நடித்த பெருமை பெற்றவர்.

இவருடைய மகனான அதர்வாவை கதாநாயகனாக நடிக்க வைத்து அழகு பார்த்தார். ஆனால் அதர்வாவின் முதல் படமே முரளியின் கடைசி படமாக அமைந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் முரளி கைப்பற்றி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக செய்திகள் பரவி வருகின்றன. நம் அனைவருக்கும் தெரிந்தது முரளி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவராவார். ஜெயலலிதாவின் மீது பற்று கொண்டதால் முரளி 2006-ஆம் ஆண்டில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

பல்வேறு அதிமுக கூட்டங்களிலும் பிரச்சாரங்களிலும் ஜெயலலிதாவை ஆதரித்தும், புகழ்ந்தும் பேசினார். எப்படியாவது ஜெயலலிதாவை 2011-ஆம் ஆண்டில் முதலமைச்சராக பார்க்கவேண்டும் என்று கனவு கண்டார். இது ஜெயலலிதாவுக்கும் தெரியும்.

ஆனால் துரதிஷ்டவசமாக 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதியன்று முரளி மாரடைப்பில் இயற்கை எய்தினார். பலரும் அவருடைய இறுதி ஆசையானது நிறைவேற்றுவதை பார்க்க இயலாமல் போய்விட்டாரே என்று மனம் வருந்தினர்.

அதன்பின் நடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் முரளி கனவு கண்டது போன்று ஜெயலலிதா வெற்றிபெற்று முதலமைச்சரானார். ஆனால் அதைப் பார்ப்பதற்கு முரளிக்கு கொடுத்து வைக்கவில்லை. இந்நிலையில் இந்த செய்தியானது சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.