15 வயதில் வீட்டை விட்டு ஓடிப் போனேன்! போதை மருந்துக்கு அடிமையானேன்! ஜெயலலிதா பட நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

தன்னுடைய சிறு வயதில் தான் சந்தித்த சிரமங்கள் குறித்து பிரபல நடிகை கங்கனா ராவத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் நடித்த பல திரைப்படங்கள் பிரம்மாண்ட வெற்றியடைந்துள்ளன. 

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கியுள்ளது. விளையாட்டு வீரர்கள் முதல், திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர் சமீபத்தில் வெளியிட்டு ஒரு பேட்டியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அதாவது, " நவராத்திரியின் 5-ஆம் நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தற்போதைய சூழல் ஒன்றும் கொடுமையானது அல்ல. கொடுமையான சூழல்களிலிருந்து தான் நல்ல சூழலை கற்றுக்கொள்ள இயலும். எனக்கு 15 அல்லது 16 வயது இருக்கும்போது வீட்டை விட்டு வெளியேறினேன். 

அடுத்த 2 ஆண்டுகளுக்குள் வெள்ளித்திரையில் பிரபலமானேன்.  அதுமட்டுமின்றி போதை பொருட்களுக்கும் அடிமையானேன். என்னுடைய வாழ்க்கை மிகவும் குழப்பம் அடைந்தது. நான் சகவாசம் வைத்திருந்த பலரிடமிருந்து இறப்பு ஒன்றுதான் என்னை மீட்டெடுத்திருக்கும். அப்போதுதான் என்னுடைய தோழி ஒருவர் எனக்கு மிகப்பெரிய உதவி செய்தார். யோகாசனா பற்றியும், ராஜயோக தியானம் பற்றியும் எனக்கு அவர் போதித்தார்.

என் தோழி எனக்கு அந்த உதவியை செய்யவில்லை என்றால் நான் இந்நேரத்திற்கு விலாசம் இல்லாமல் தொலைந்திருப்பேன். மேலும், பிரம்மச்சரியம் என்பது தனிமை மட்டுமல்ல. அதில் நிறைய நன்மைகள் உள்ளன. நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான், இந்த நேரத்தில் நல்வழியில் உபயோகித்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.