ஐதராபாத் பெண் டாக்டருக்கு கிடைத்த நீதி என் மகளுக்கும் வேண்டும்..! ஒரு தாயின் கதறல்! யார், ஏன் தெரியுமா?

பெண் டாக்டர் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு கிடைத்த தீர்ப்பு போல என் மகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று ஒரு தாயார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர், 4 லாரி ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இன்று 4 குற்றவாளிகளும் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சீமா சிங் என்ற பெண் வினோதமான ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

என்னுடைய மகளின் பெயர் சாரா சிங். இவரை அமன்மானி திரிப்பாதி என்ற அரசியல்வாதி பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் எந்தவித தண்டனையையும் அனுபவிக்காமல் அவர் சுதந்திரமாக சுற்றி வருகிறார். இந்திய மக்கள் அனைவரும் தயவுசெய்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்துக்கு அழுத்தம் தாருங்கள்.

பிரியங்கா ரெட்டி கிடைத்த நீதி என்னுடைய மகளுக்கும் கிடைக்க வேண்டும்" என்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார். நெட்டிசன்கள் பலர் உங்களுடைய மகளுக்கும் நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையூட்டும் வகையில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த பதிவானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.