என் மனைவியுடன் உனக்கு கள்ள உறவு! வா பேசலாம்..! நம்பி சென்ற இளைஞரின் தலை மாயம்! சடலம் மட்டும் மீட்பு! சென்னை திகுதிகு!

கள்ளக்காதல் விவகாரத்தில் பிரபல ரவுடி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் கொரட்டூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அடுத்துள்ள கலைவாணர் நகர் எனும் பகுதியை சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை ஆகிய வழக்குகள் பதிவாகியுள்ளன. அவருடைய தாயாருடன் இவர் வசித்து வந்தார். 14-ஆம் தேதி இரவன்று வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை.

கவலைப்பட்ட அவருடைய தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

அதாவது சுரேஷுக்கு அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கார்த்திகா மற்றும் அவருடைய கணவரான ஜெயக்கொடி என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

முதலில் சுரேஷ் தங்களுடைய வீட்டிற்கு அத்துமீறி நுழைந்ததாகவும், அதனால் அவரை பயங்கரமாக தாக்கியதாகவும் கூறியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அவன் தப்பித்து சென்றதாக கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

காவல்துறையினர் துருவித்துருவி அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சுரேஷ் கார்த்திகாவுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள முயற்சித்ததாகவும், அது வேண்டாம் என்று அறிவுரை கூறுவதற்காக சுரேஷை வீட்டிற்கு அழைத்ததாக கூறியுள்ளனர். அப்போது சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரம் தலைக்கேறி அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்ததாகவும், உடலை விளங்காடுபக்கத்தில் வீசியதாகவும், தலையை வேறு ஏதோ இடத்தில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

காவல்துறையினர் விலங்கான பக்கத்திற்கு சென்று தலை இன்றிக்கிடந்த சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாக்கு மூலம் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் கார்த்திகா மற்றும் ஜெயக்கொடியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.