நித்திக்கு ஆணும் பிடிக்கும் பெண்ணும் பிடிக்கும்! ரஞ்சிதா தான் அவருக்கு எல்லாம்! தஞ்சை சீடர் வெளியிட்ட பகீர் தகவல்கள்!

நித்யானந்தா கர்நாடக பிடதி ஆசிரமத்துக்கு உள்ளேயே பதுங்கியிருப்பதாக சிஷ்யர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நித்யானந்தா மீது ஒரு சில நாட்களாகவே கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. 12-ஆம் தேதிக்குள் நித்யானந்தாவை ஒப்படைக்கவேண்டும் என்று கர்நாடக நீதிமன்றம் காவல்துறையினருக்கு ஆணை பிறப்பித்துள்ளது. இதனுடைய நித்யானந்தாவின் இருப்பிடம் குறித்து சிஷ்யர் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2009-ஆம் ஆண்டில் பிடதி ஆசிரமத்தில் தாயுடன் சென்று இணைந்து கொண்டதாக விஜி நித்தியானந்தா என்ற இளைஞர் கூறியுள்ளார். தொடக்கத்தில் லட்சக்கணக்கான பணத்தை செலுத்தினால் 2 அல்லது 3 முறை அதிகப்படுத்தி தருவதாக நித்யானந்தா கூறியதை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார்.

ஆனால் அவ்வாறு எதுவும் நடக்காமல் நித்யானந்தாவுடன் இருந்த பாவத்திற்காக பல்வேறு வழக்குகளில் சிக்கி வாழ்க்கையை தொலைத்தாக அந்த இளைஞர் புலம்புகிறார். நித்யானந்தா இருப்பாலின சேர்க்கையாளர் என்று கூறியுள்ள விஜி, 2015-ஆம் ஆண்டில் தன்னையும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடனும் பாலுறவில் ஈடுபட்டு நித்யானந்தா காம இச்சையை தீர்த்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

அனைத்து ஆசிரமங்களுக்கும் ராஜாமாதாவாக நடிகை ரஞ்சிதா செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். அவரின் அனுமதியின்றி அங்கு ஒரு அணுவும் அசையாது என்றும், முக்கிய விருந்தாளிகள் ஐ எவ்வாறு கவனிப்பது என்பதை ரஞ்சிதா தான் பட்டியலிடுவார் என்றும் கூறியுள்ளார். அம்மா என்று அழைத்தால் வயது அதிகமாகிவிட்டது என்ற எண்ணம் வந்து விடும் என்பதற்காக அனைவரையும் ரஞ்சிதா, அக்கா என்று அழைக்குமாறு கூறியுள்ளார்.

நித்யானந்தா தற்போது வெளியிட்டு வரும் வீடியோக்கள் அனைத்தும் கிராஃபிக்ஸ் என்று கூறியுள்ள அவர், வீடியோவை பார்க்கும் போது பின்புறத்தின் அனைத்து வசதிகளும் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் உள்ள ரகசிய அறையில் உள்ளது என்றும் துப்பு கொடுத்துள்ளார். நடிகை ரஞ்சிதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினால் சேலம் ஆக சுவாமி நித்தியானந்தாவை கண்டுபிடித்துவிடலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.