உடல் ரீதியான தொந்தரவுகள்..! பிரபல இளம் நடிகை உடைத்த ரகசியம்!

பிரபல நடிகை பாலியல் தொந்தரவுகளை சந்தித்துள்ளதாக பேட்டியளித்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் "சிங்கம்புலி", "கந்தர்வன்" ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஹனி ரோஸ். கோலிவுட்டில் இவ்விரு படங்களில் மட்டும் நடித்துள்ள இவர், அதன்பின்னர் மலையாள திரையுலகிற்கு சென்றுவிட்டார். அங்கு அவர் பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

திரையுலகிற்கு வந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. சமீபத்தில் இவர் திரையுலகில் தான் கடந்து வந்த பாதை குறித்து சமூக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதாவது, " புதுமுகமாக திரையுலகில் நுழைந்த போது, பல்வேறு விதமான இன்னல்களை சந்தித்து வந்தேன். சில படங்கள் நடித்த பின்னர் எனக்கு பட வாய்ப்புகள் மிகவும் குறைந்தன. அப்போது என்னை திரைத்துறை சார்ந்த பலர் படுக்கைக்கு அழைத்தனர்.

ஆனால் என்னுடைய பெற்றோர் என்னுடன் இருந்ததால் நான் எந்த வித தவறான முடிவையும் எடுக்கவில்லை. நான் அந்த இடைவெளியை நன்றாக பயன்படுத்தி கொண்டேன். நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க கற்றுக்கொண்டேன். தற்போது சினிமாத்துறை சற்று முன்னேறியுள்ளது‌" என்று மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.