எனக்கு அவர் அப்பா! என்னை மகளேனு தான் கூப்பிடுவார்! ராபர்ட் ராஜசேகர் உடலை பார்த்து உருகிய பெண்! யார் தெரியுமா?

இயக்குநர் ராஜசேகரின் மறைவிற்கு பிரபல பாடலாசிரியர் கண்ணீர் மல்க எழுதியிருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


சின்னத்திரையிலும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளித்திரையிலும் ஜொலித்தவர் நடிகர் ராஜசேகர். கதாநாயகராக, இணை இயக்குநராக, குணச்சித்திர நடிகராக ராஜசேகர் அவர்கள் பல்வேறு பரிமாணங்களில் திரைத்துறையில் ஈடுபட்டிருந்தார்.

பாலைவன சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்லப்பேசு ஆகிய படங்களை ராபர்ட் என்பவருடன் இணைந்து இயக்கினார். "இது ஒரு பொன்மாலை பொழுது" பாடலில் நடித்து திரையுலகில் பிரபலமடைந்தார். "சரவணன் மீனாட்சி" சின்னத்திரை தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றார். மனசுக்குள் மத்தாப்பு படத்தை இயக்கியபோது நடிகை சரண்யாவை விரும்பி திருமணம் புரிந்தார். 

மாரடைப்பு காரணமாக ராஜசேகர் நேற்று மதியம் இறந்து போனார். ராஜசேகரின் மறைவிற்கு பல்வேறு தரப்பினர் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் வசனகர்தா பத்மாவதியும் ராஜசேகரின் மறைவிற்கு கண்ணீர் மல்க அஞ்சலியை பதிவு செய்துள்ளார்.

"உங்களை ராஜசேகர் அப்பா என்று அழைத்தது ஆகவே என் நினைவில் உள்ளது. நான் வசனம் எழுதிய படம் வெளிவந்தவுடன்,  ரொம்ப நல்லா எழுதற பத்மா. அசத்து மகளே என்று வாழ்த்துவீர்கள். இன்று உங்கள் இறப்பு செய்தியை அறிந்தவுடன் மீளாத்துயருக்கு ஆளானேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவானது சமூக வலைதளங்களில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.