பிவி சிந்து தான் என் பொண்டாட்டி! 70 வயது ராமநாதபுரம் முதியவர் கூறும் செம காரணம்!

பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவை திருமணம் செய்துகொள்ள தனக்கு தகுதிகள் உள்ளதாக முதியவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள விரதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. இவருடைய வயது 70. இவர் இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். பேட்மிட்டன் புகழ் பி.வி.சிந்துவின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. 

அந்த மனுவில் மலைச்சாமி பி.வி.சிந்துவை திருமணம் செய்யப்போவதாக கூறியிருந்தார். மேலும் அதற்கான அனைத்து தகுதிகளும் தன்னிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். தான் கிழவனை போன்று தோற்றமளித்தாலும் தன்னுடைய வயது 16 தான் என்று கூறினார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்ள தனக்கு எந்தவித உதவியும் தேவையில்லை என்றும் கூறியிருந்தார். எனக்கும் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உள்ளது என்று கூறினார்.

மனுவில் குறிப்பிட்டிருந்தது அவர் நியூஸ்7 தொலைக்காட்சியினரிடமும் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியானது இந்தியாவில் பரபரப்பாகி வருகிறது.