ஒரே நேரத்தில் ஓகே சொன்ன 2 பெண்கள்! எந்த பெண்ணை மணப்பது? குழப்பத்தில் இளைஞன் எடுத்த பகீர் முடிவு!

காதலியை கைவிட மனதில்லாமல் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட அம்மன் நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர்.

இதனிடையே மணிகண்டனுக்கு அவருடைய பெற்றோர் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்தனர். நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் மணிகண்டன் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்துள்ளார்.

இதனால் மணிகண்டனின் காதலிக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மணிகண்டனை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மணிகண்டனும் மனது மாறி தன்னுடைய காதலியை திருமணம் செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இதுகுறித்து வீட்டில் கூறியபோது பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனமுடைந்த மணிகண்டன் வேறுவழியின்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மணிகண்டன் தூக்கில் தொங்குவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.