அண்ணா அப்டி செய்யாத..! தங்கையை தொடக் கூடாத இடத்தில் தொட்டு வக்கிரம்! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

சகோதரரின் பாலியல் தொந்தரவுகளை தாங்க இயலாத பெண் அவரை கொலை செய்த சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலத்தில் செம்பூர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ரேஷ்மா ஓவ்ஹால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 29.  இவருடைய சகோதரரின் பெயர் தேவேந்திரா அக்காடே. இவரின் வயது 32. இவர்களுடைய தந்தை காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே தேவேந்திராவுக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு வந்து சகோதரியிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். பலமுறை தேவேந்திரா ரேஷ்மாவை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். இதனால் ரேஷ்மா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் சகோதரரின் தொல்லைகளை தாங்க இயலாத அவர், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி டிசம்பர் மாதம் 1-ஆம் தேதியன்று, தன்னுடைய தந்தை வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் ரேஷ்மா அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ரேஷ்மாவின் சகோதரரான தேவேந்திரா மதுபோதையில் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரேஷ்மா அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

கொலை செய்த பின்னர் தன்னுடைய மைத்துனரான சந்திரகாந்த் பட்னாகரை அங்கு அழைத்து நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். அதன்பின் இருவரும் இணைந்து பிம்வாடி ரயில்வே நிலையத்திற்கு அருகே தேவேந்திராவின் சடலத்தை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

3-ஆம் தேதியன்று அந்த ரயில் நிலையத்தில் அனாதை சடலம் கிடந்துள்ளதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர.

பின்னர் அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மறுநாளே, 1-ஆம் தேதியன்று இருவர் சந்தேகிக்கும் வகையில் பிம்வாடி ரயில்வே நிலையத்திற்கு அருகே நடமாடியதாக தகவல்கள் கிடைத்தன.

உடனடியாக காவல்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர். அதன்பின்னர் ரேஷ்மா மற்றும் அவருக்கு உடந்தையாகயாக இருந்த சந்திரகாந்த்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது செம்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.