உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் மறைவு செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன் - முதலமைச்சர் எடப்பாடி இரங்கல்

உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.எம். நடராசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசரும், சமுதாய உணர்வு மிக்கவருமான திரு.K.M.நடராசன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவர், செங்கல்வராயர் அறக்கட்டளையின் தலைவர் போன்ற பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர். புரட்சித்தலைவர் Dr.MGR, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பாராட்டைப் பெற்று, வாழும்போதே வரலாறாக வாழ்ந்த திரு.K.M.நடராசன் அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கு பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.