இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவரை வணங்கி போற்றுகிறேன்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினம். இவர் அரசியல்வாதியாக பிறக்கவும் இல்லை, மரிக்கவும் இல்லை. சாதாரண மனிதனாகப் பிறந்து, சாமானியனாகவே மரணம் தொட்டனவர்.


கடைசி காலம் வரையிலும் மாணவர்கள் முன்னேற்றம், மாணவர் வெற்றி, மாணவர் சிந்தனை என்றே தன் காலத்தைக் கழித்தவர். அதனால்தானோ என்னவோ, பொதுமேடையிலே இவரது உயிர் பிரிந்தது. 

ஒரு சாதாரண மனிதனும் உச்சம் தொட முடியும் என்பதை நாட்டுக்கு எடுத்துக்காட்டியவர் அப்துல் கலாம். ஆம் அரசு பள்ளியில் படித்த அப்துல்கலாம், நாட்டின் முதல் குடிமகன் என்ற அளவுக்கு உயர்ந்தார். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி அளித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

அவரது வாழ்த்து செய்தியில், ‘கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்" என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.