மாயமான பெண் என்ஜினியர் துண்டு துண்டாக சூட்கேசில் மீட்பு! ஆண் நண்பரின் கொடூரம்!

காணாமல் போன பெண் மென்பொருள் பணியாளர் சூட்கேஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


ஐதராபாத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரை காணவில்லை என, அவரது பற்றோர் போலீசில் புகார் அளித்தனர். கடைசியாக, அந்த பெண்ணை, ஐதராபாத் விமான நிலையத்தில், ஆண் நண்பர் ஒருவருடன், மஸ்கட் செல்ல விமானம் ஏற்றி வைத்து அனுப்பியதாக, அவர்கள் பெற்றோர் கூறியுள்ளனர்.

இதன்பேரில், குறிப்பிட்ட ஆண் நண்பரை சுற்றி வளைத்து போலீசார், விசாரித்தனர்.இதில், மெத்சால் என்ற புறநகர்ப்பகுதியில் வைத்து, அந்த இளம்பெண்ணை கொன்று,சூட்கேஸில் அடைத்து, சாக்கடையில் வீசிவிட்டதாக, அவர் கூறியுள்ளார். மேலும், ஒருதலையாக, இளம்பெண்ணை காதலித்ததாகவும், அவர் மறுத்ததால், ஆத்திரம் ஏற்பட்டு கொன்றுவிட்டதாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தில் போலீசார் ஆய்வு செய்து, இளம்பெண் சடலத்தை கண்டுபிடித்தனர். ஆண் நண்பராக பழகிய நபரே, காதல் என்ற பெயரில், இளம்பெண்ணை கொன்ற சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.